e0aeaee0af8d-e0aeaae0af81e0aeb0e0ae9fe0af8de0ae9fe0aebee0ae9ae0aebf-e0aeaee0aebee0aea4.jpg" style="display: block; margin: 1em auto"> திருவோணம், புரட்டாசி மாத பூஜை… செப்.13ல் சபரிமலை நடை திறப்பு! Dhinasari Tamil Sakthi Paramasivan.k
திருவோணம் பண்டிகை புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 13ஆம் தேதி மாலை நடை திறந்து செப்14முதல் பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
15-ந் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 14 15, 16. 17ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தற்போது சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் மிக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. பக்தர்கள் பம்பை நதிக்கரையோரம் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் முக்கியப் பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. திருவனந்தபுரம், புனலூர், செங்கனூர், கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
ரயிலில் வரும் பயணிகள் சென்னையில் இருந்து செங்கோட்டை வழி கொல்லம் செல்லும் ரயிலில் புனலூரில் இறங்கினால் புனலூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பைக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம், மதுரை – குருவாயூர் ரயில்களில் புனலூர் வரை பயணித்து, புனலூரில் இருந்து பஸ் அல்லது டூரிஸ்ட் வாகனம் மூலம் பம்பைக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளது.
திருவோணம், புரட்டாசி மாத பூஜை… செப்.13ல் சபரிமலை நடை திறப்பு! News First Appeared in Dhinasari Tamil