யோகா , ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்-ரவிசங்கர்..

செய்திகள்
2">

இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…

images 2023 02 28T165226.800 - Dhinasari Tamil

அப்ப சொன்னதையே இப்பவும் சொல்றேன். சில நாடுகளின் சதியால் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என மும்பையில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஆன்மீக குரு ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவல் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக உலக நாடுகளை ஆட்டி படைத்து வரும் நிலையில், மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ரவிசங்கர் பேசும்போது கூறியது,

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. 2 ஆண்டுகளாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், இந்த நோயானது இயற்கையானது அல்ல என கூறினேன். சில நாடுகள் மற்றும் மக்களின் சதி திட்டம். அது உயிரியியல் சார்ந்த போர் என கூறினேன். என்னுடைய சீடர்கள் கூட இதனை வெளியே கூறி விடாதீர்கள். அது சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என எனக்கு அறிவுறுத்தினர். தற்போது நான் கூறிய விசயங்கள்அது நிரூபணம் ஆகி விட்டது.

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகள், அவை இருக்க வேண்டிய திறனுடன் இல்லை என கூறி வருகின்றன. அது கொரோனா பரவலை நிறுத்தவில்லை என்றும் கூறுகின்றன. இந்த கொரோனா பற்றிய அதிக தகவல் எதனையும் நாங்கள் பெறவில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று நான் உணர்ந்தேன். இதற்காக என்.ஏ.ஓ.கியூ.19 உற்பத்தி செய்யப்பட்டு, 14 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த என்.ஏ.ஓ.கியூ.19 கொரோனா வைரசை குணப்படுத்தும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள பல பெரிய பல்கலை கழகங்களுக்கு இந்த என்.ஏ.ஓ.கியூ.19 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதில் இந்த மருந்து வெற்றி பெறும் என மக்களும் உணர்ந்தனர். செல்லுலார் சோதனையிலும் அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply