ராகி அட்வைஸ்.. மகான்களின் மகத்துவம்!

செய்திகள்
" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d.jpg" alt="pranthara das - Dhinasari Tamil" class="wp-image-255367 lazyload ewww_webp_lazy_load" title="ராகி அட்வைஸ்.. மகான்களின் மகத்துவம்! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-1.jpg.webp 1067w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/06/e0aeb0e0aebee0ae95e0aebf-e0ae85e0ae9fe0af8de0aeb5e0af88e0aeb8e0af8d-e0aeaee0ae95e0aebee0aea9e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d-1.jpg 1067w">

புரந்தரதாசருக்கு நாள் முழுவதும் புரந்தர விட்டலனையே நினைத்துக்கொண்டிருப்பார். இரவில் தூங்கும்போது கூட கனவில் கூட புரந்தரவிட்டலன் வருவானாம்.

அவன் சர்வ அலங்காரத்துடன் கொலுசு சத்தம் செய்தபடி வருவானாம். தேவர்கள் அவனை பூஜிப்பதும் சேவை செய்வதும் அவருக்கு தெரியுமாம்.

அவர் பாடல்கள் இரட்டை அர்த்தங்களுடன் மனிதர்களுக்கு புத்தி புகட்டும்படி இருக்கும்.

அவருடைய “ராகி தந்தீரா” என்ற பாட்டுஅவைகளில் ஒன்று. ஏழைகளின் உணவாகிய ராகி என்ற வார்த்தையை வைத்து விளையாடி இருக்கிறார். பாருங்கள்.

ராகி தந்தீரா பிக்ஷக்கே ராகி தந்தீரா ராகி கொண்டு வந்தீரா பிக்ஷைக்கு ராகி கொண்டு வந்தீரா
யோக்யராகி போக்யராகி
பாக்யவந்தராகி நீவு (ராகி)
நல்லவராகி, (தானத்தை) கொடுப்பதில் மகிழ்ச்சியுடையவராகி
சகல சௌபாக்கியங்களையும் பெற்று நீங்கள் (ராகி)
அன்னதானவ மாடுவராகி
அன்ன சத்ரவன்னிட்டவராகி
அன்ய வார்த்தையா பிட்டவராகி
அனுதின பஜனெய மாடுவராகி (ராகி)
(தானத்தில் சிறந்த தானமாகிய) அன்ன தானத்தை செய்பவராய்,
பசியால் வாடுபவர்களுக்கு சத்திரத்தை நிறுவியவராய்,
புறம் பேசாமல் இருப்பவராய்,
தினந்தோறும் பகவானின் பெயர் சொல்லி பஜனை செய்பவராய் இருப்பீராக.. (ராகி)
மாதா பிதரனு சேவிதராகி
பாதக கார்யவ பிட்டவராகி
க்யாதியல்லி மிகிலாவதராகி
நீதி மார்கதல்லி க்யாதராகி (ராகி)
தந்தை தாயை மதித்து அவர்களை வழிபடுபவராய்,
யாருக்கும் கெடுதல் செய்யும் காரியங்களை விட்டவராய்,
நீதி நேர்மைக்கு பயந்து அதன்படி நடப்பவராக இருந்து.. (ராகி)
ஸ்ரீ ரமணன சதா ஸ்மரிசுவராகி
குருவிகே பாகோரந்தவராகி
கரெ கரெ சம்சாரா நீகுவராகி
புரந்தர விட்டலன சேவிதராகி (ராகி)
இலக்குமியின் பதியான ரமணனை எப்பொழுதும் நினைப்பவராய்,
(உபதேசம் செய்யும்) குருவின் சொற்படி நடப்பவராய்,
(உங்களுக்கு அமைந்துள்ள) குடும்ப வாழ்க்கையை பொறுப்புடன் நடத்தும் ஒரு இல்லத்தரசனாய்,
அந்த புரந்தர விட்டலனை வணங்குபவராய் இருந்து (ராகி)

இந்த பாடலில் ‘ராகி’ என்ற அந்த ஒரு வார்த்தையை வைத்து – பிட்ஷையும் கேட்ட அதே சமயத்தில், தாஸர் மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளதை கவனியுங்கள்.

யோக்யராகி போக்யராகி – இதில்தான் மேலே சொன்ன அந்த ‘இரட்டை அர்த்தம்’.
சரி என்ன அது இரட்டை அர்த்தம்?

யோக்யராகி –
அ. யோக்யர் + ஆகி = (நீங்க) நல்லவரா இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. யோக்ய + ராகி = நல்ல ராகியை பிட்ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கிறது.

அதே மாதிரி –
போக்யராகி –
அ. போக்யர் + ஆகி = (நீங்க) தானத்தை கொடுப்பதில் மகிழ்ச்சியுடைவராக இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. போக்ய + ராகி = (சாப்பிட்டா) மகிழ்ச்சிகொடுக்ககூடிய ராகி பிக்*ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கிறது.

இதில் இரண்டாவது அர்த்தங்களை பாருங்க. நல்ல ராகி கேக்குற மாதிரி – மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கறாரீ. நாம் முதல் அர்த்தத்தையே எடுத்துக்கிட்டு ’கரையேற’ முயற்சி செய்வோம்.

Leave a Reply