இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின கொண்டாட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது.நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. திருவனந்தபுரம் திருச்செந்தூர் சென்னை கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அய்யாவழி வழி பக்தர்கள் பங்கேற்றனர் இவ் விழாவை முன்னிட்டு குமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக ஐயா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். அவரது 191-வது அவதார தினமான இன்று அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம்.
வைகுண்ட சுவாமியின் அவதார தினமான இன்று (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. திருவனந்தபுரம் திருச்செந்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அய்யாவழி வழி பக்தர்கள் பங்கேற்றனர் இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கித்தார்ர். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.
இந்த ஊர்வலம் நாகர் கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை சென்ற டைகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். இன்று இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.
அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் 4 தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.