அழகர்கோயிலில் அலைமோதிய அன்பர்கள் கூட்டம்!

செய்திகள்
crowd in azhagarkoil - Dhinasari Tamil

அழகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கில் அன்பர்கள் கூட்டம் அலைமோதியது:

மதுரை அருகே உள்ளது அழகர்கோவில் ஆகும். இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற புகழ்பெற்ற ஸ்தலமாகும். ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அழகர் மலை மேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கெங்கைம பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித தீர்த்தம் ஆடி அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபட்டு தொடர்ந்து, ஆறாவது படை வீடு இடம் சோலைமலை முருகன் கோவிலில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அங்கும் பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து மழை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமியுடன் வீற்றிருந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள கல்யாண சுந்தரவல்லி தாயார் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் ஆண்டாள் ஆகிய தெய்வங்களை வழிபட்டு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமியை பக்தர்கள் வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மு. ராமசாமி செய்திருந்தனர்.

Leave a Reply