அத்வைத சித்தாந்தத்தில் ஜீவன் முக்தி நிலை பற்றி விவரமாக உள்ளது அத்ர ப்ரஹ்ம சமஷ்ருதே என்று ச்ருதியும் கூறுகிறது.
இந்த தேகம் இருக்கும் சமயம் முக்தி அடைவது தான் ஜீவன் முக்தி நிலை யாகும் ச்ரவணம் மனனம் நிதித்யாஸனம் மூலமாக வாசனைகளையும் மனதையும் கடந்த நிலையில் ஜீவன் முக்தி நிலை அடைகிறோம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
ஜீவன் முக்தி நிலை பற்றி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்
ஸவிதர்யபி ஷீதருசௌ சந்திரே தி ந க்ஷ்ணேப்யதோ வஹத்யக் னௌவ் மாயிகமிதமிதி ஜாநன் ஜீவன் முக்தோ ந விஸ்வ மயி பவதி
என்று கூறியுள்ளார்கள்.
சூரியன் குளிர்ந்தாலும் சந்திரன் சூடான வெப்ப நிலையை அடைந்தாலும் அக்னி கீழ்நோக்கி எரிந்தாலும் ஜீவன் முக்தனை அது பாதிக்காது ஜீவன் முக்தன் அவைகளைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை கவலைப்படுவதும் இல்லை. இதையே ஜனகர் மிதிலாயாம் ப்ரதீப்த்தாயாம் ந மே கிச்சனில் ப்ரதஹ்யதே மிதிலை தீக்கிரையானலும் என்னை பாதிக்காது என்று கூறுகிறார்.
இது சச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம் நிலை இது எல்லா இடங்களிலும் எந்த சமயத்திலும் பிரகாசமாகவும் நிதர்சனமாகும் இருக்கும் பகவத் கீதையில் பகவான்
அத்வேஸ்டோ ஸர்வ பூதானாம் என்று ஆரம்பித்து துல்ய நிந்தாஸ்துதிர் மௌனீ ஸந்துஷ்டோயேன கேநசித் அனிகேத: ஸ்திரமதி: பக்திமான்மே ப்ரியோ நர:
என விவரமாக கூறியுள்ளார்.
ஜீவன் முக்தன் யாரையும் வெறுப்பதில்லை அவமானத்தை பொருட்படுத்துவதில்லை மௌனமாகவும் எதிலும் எவ்விடத்திலும் திருப்தியுடனும் ஒரு மனதுடனும் எப்பொழுதும் தியானத்துடன் இருக்கும் அந்த மனிதன் எனக்கு மிகவும் பிரியமானவன் என்று கூறுகிறார்
சுகர் வாமதேவர் தத்தாத்ரேயர் பிரசித்தி பெற்ற ஜீவன் முக்தர்கள் தற்காலத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதி சுவாமிகள் நமக்கு தெரிந்த ஜீவன் முக்தர்கள் ஆகும் அவர்களை எப்போதும் நினைத்து அவர்கள் நாமாவை உச்சரித்து வந்தாலே நமக்கு நல்லது கிடைக்கும்
அந்த ஜீவன் முக்தன் நிலை அடைவது தான் மனித ஜென்மம் எடுத்ததன் பயன் ஆகும் அது ஞானம் வந்த உடனே அடையக் கூடியதாகும்
ஞான ஸமகால முக்த: கைவல்யம் யாதி ஹதசோக:
அப்பேர்பட்ட ஜீவன் முக்தர்களை நினைத்து வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ள வேண்டும்.
எது மாறினாலும் நம் நிலைப்பாடு.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.