ஒரு முறை பார்வதி தேவி, பரமசிவனைப் பார்த்து, ‘புத்திர தோஷத்தால் அல்லலுறும் மக்களுக்கு நிம்மதி பெற, தோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் என்ன” எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.
சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:
பொருள்: தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பவனே! வாசுதேவனின் மைந்தனே! இவ்வுலகுக்கு எல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய்வாய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகந்நாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தரும் தயாளா! நீண்ட ஆயுள் கொண்ட குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!
புத்திரப்பேறு, சந்தானப் பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேலே தரப்பட்டுள்ள சுலோகத்தை ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலை நேரத்தில் தினமும் 11 முறைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், நிச்சயம் புத்திரப்பேறு உண்டாகும்.
ஒரு பலகையில் விளக்கு ஏற்றி வைத்து, கிருஷ்ணர் படத்தையும் வைத்து, இந்த மந்திரத்தைச் சொல்லி வந்தாலே போதும்… ஸ்ரீகிருஷ்ணன் அருளால் குழந்தைப் பேற்றுக்கான சூழலைகைகூடப் பெறுவர்.