912:
வானுளா ரறிய  லாகா வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய். என்ப  ராகில்,
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம்  தருவரேல் புனித மன்றே? (41)
913 
 :
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி  மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின்  கொள்மின் என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.  (42)
913:
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய  சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்,  ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே.  (43)
915:
பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா  வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை  யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. (2)  (44)
916:
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை  கொன்ற கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ  டிசொல்,
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. (2) (45)
தொண்டரடிப்பொடி ஆழ்வார்  திருவடிகளே சரணம்


