ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த *
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் * – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும் *
உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.
அவதரித்த ஊர் : திருக்கோளூர்
மாதம் : சித்திரை
நட்சத்திரம் : சித்திரை
அம்சம் : குமுத, வைநதேயாம்சம்
அருளிச் செய்த பிரபந்தம்: கண்ணிநுண்சிறுத்தாம்பு
———–
சைத்ரே சித்ரா ஸமுத்பூதம் பாண்டிய தேசே கணாம்சகம்
ஸ்ரீபராங்குச ஸத்பக்தம் மதுரங்க விமாஸ்ரயே.
குமுதர் என்கிற கணாதிபருடைய அம்சமாக , திருக்கோளூரில், துவாபரயுகம் 863 879-வதான ஈசுவர வருஷம் சித்திரை மாஸம் சுக்லபட்ச சதுர்தசி வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில், ஸாமவேதம் அத்யயனம் பண்ணும் பூர்வ சிகையை உடையபிராம்மண குலத்தில் அவதரித்தார்.
பகவத் பக்தியினும் ஆசார்ய ப்ரதிபத்தியை பரமாநுஷ்டானமாகக் கொண்டு நம்மாழ்வார் விஷயமாக கண்ணிநுண்சிறுத்தாம்பு (11-பாட்டு) அருளினார்.{jcomments on}