style="text-align: center;">1ஆம் பத்து 3ஆம் திருமொழி
968
முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே. 1.3.1
969
முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 1.3.2
970
உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே. 1.3.3
971
பீளைசோரக்கண்ணி
டுங்கிப் பித்தெழமூத்திருமி,
தாள்கள் நோவத்தம்மில்
முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று
மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4
972
பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி
யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.5
973
எய்த்தசொல்லோடீளைf
யேங்கி இயிருமியிளைத்துடலம்,
பித்தர்ப்போலச்சித்தம்
வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த,
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே. 1.3.6
974
பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே. 1.3.7
975
ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.8
976
புலன்கள்நையமெய்யில்
மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத
வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே. 1.3.9
977
வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி
யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே. 1.3.10