23
52:
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71
2353:
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை
இளங்குமரர் கோமான் இடம். 72
2354:
இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம். 73
2355:
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டுபோய் வீழ, – சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74
2356:
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு. 75
2357:
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76
2358:
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண். 77
2359:
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், – சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
2360:
ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று. 79
2361:
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, – வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80