பேயாழ்வார் திருச்சரிதம்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *
நின்றது உலகத்தே நிகழ்ந்து.
– மணவாளமாமுனிகள் அருளிய உபதேசரத்னமாலை
அவதரித்த ஊர் : திருமயிலை (மயிலாப்பூர்)
அவதரித்த மாதம் : ஐப்பசி
அவதரித்த நட்சத்திரம் : சதயம்
அவதார அம்சம் : நந்தகாம்சம்
அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி
style="text-align: center;">—–
(குருபரம்பரைப்படி…)
துலாசதபிஷக்ஜாதம் மயூரபுர கைரவாத்
மஹாந்தம் மஹதாக்யாதம் வந்தே ஸ்ரீநந்தகாம்சகம்.
ஸ்ரீநந்தகத்தின் அம்சத்தில்,
பூதத்தாழ்வார் அவதரித்த தினத்திற்கு மறுதினமான தசமி திதி
வியாழக்கிழமை கூடிய சதய நட்சத்திரத்தில்,
திருமயிலை நகரில்,
ஒரு கிணற்றிலே மலர்ந்த செவ்வல்லிப் பூவிலே அயோநிஜராய் அவதரித்து,
எம்பெருமான் திருவடிகளில் பிரியா அன்புள்ளவராய் எழுந்தருளியிருந்தார்.
இவர் அருளிச்செய்த பிரபந்தம் மூன்றாந்திருவந்தாதி, 100 பாசுரங்கள்.
மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-15.{jcomments on}