மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

23 02:
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. 21

2303:
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் – படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு. 22

2304:
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும். 23

2305:
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே. தொழுது. 24

2306:
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே. சிறந்து? 25

2307:
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார். 26

2308:
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங்கடலை, நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? 27

2309:
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான். 28

2310:
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29

2311:
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை. 30

Leave a Reply