திருவாய்மொழி முதல் பத்து

நம்மாழ்வார்

 

style="text-align: center;">1ஆம் பத்து 8ஆம் திருவாய்மொழி

 

2868

ஓடும்புள்ளேரி,

சூடும தண்டுழாய்,

நீடு நின்றவை,

ஆடும் அம்மானே. 1.8.1

 

2869

அம்மானாய்ப் பின்னும்,

எம்மாண fபுமானான,

வெம்மா வாய்கீண்ட,

செம்மா கண்ணனே. 1.8.2

 

2870

கண்ணா வானென்றும்,

மண்ணோர்விண்ணோர்க்கு,

தண்ணார் வேங்கட,

விண்ணோர fவெற்பனே. 1.8.3

 

2871

வெற்பை யொன்றெடுத்து,

ஒற்க மின்றியே,

நிற்கும் அம்மான்சீர்,

கற்பன் வைகலே. 1.8.4

 

2872

வைக லும்வெண்ணெய்,

கைக லந்துண்டான்,

பொய்க லவாது, என் –

மெய்க லந்தானே. 1.8.5

 

2873

கலந்தென்னாவி,

நலங்கொள் நாதன்,

புலங்கொள் மாணாய்,

நிலம்கொண் டானே. 1.8.6

 

2874

கொண்டா னேழ்விடை,

உண்டா னேழ்வையம்,

தண்டா மஞ்செய்து, என் –

எண்டா னானானே. 1.8.7

 

2875

ஆனா னானாயன்,

மீனோ டேனமும்,

தானா னானென்னில்,

தானா யசங்கே. 1.8.8

 

2876

சங்கு சக்கரம்,

அங்கையில் கொண்டான்,

எங்கும் தானாய,

நங்கள் நாதனே. 1.8.9

 

2877

நாதன்ஞாலங்கொள் –

பாதன், என்னம்மான்,

ஓதம் போல்கிளர்,

வேதநீரனே. 1.8.10

 

2878

நீர்புரை வண்ணன்,

சீர்ச்சடகோபன்,

நெர்த லாயிரத்து,

ஓர்தலிவையே. 1.8.11

Leave a Reply