style="text-align: center; ">முதல் பத்து – 2ம் திருவாய்மொழி
2802
வீடுமின் முற்றவும்
வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை
வீடுசெய்ம்மினே. (2) 1.2.1
2803
மின்னின் நிலையில
மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை
உன்னுமின் நீரே. 1.2.2
2804
நீர்நும தென்றிவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அத
னேர்நிறை யில்லே. 1.2.3
2805
இல்லது முள்ளதும்
அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்
புல்குபற் றற்றே. 1.2.4
2806
அற்றது பற்றெனில்
உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே. 1.2.5
2807
பற்றில னீசனும்
முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்
முற்றி லடங்கே. 1.2.6
2808
அடங்கெழில் சம்பத்து
அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று
அடங்குக வுள்ளே. 1.2.7
2809
உள்ள முரைசெயல்
உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
யுள்ளிலொ டுங்கே. 1.2.8
2810
ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை
விடும்பொழு தெண்ணே. 1.2.9
2811
எண்பெருக் கந்நலத்து
ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே. (2) 1.2.10
2812
சேர்த்தடத் தென்குரு
கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து
ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11