" height="400" />
ஆண்டாள்
இன்றோ திருவாடிப் பூரம் * எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் * – குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து *
ஆழ்வார் திருமகளா ராய்
அவதரித்த ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
மாதம் : ஆடி
நட்சத்திரம் : பூரம்
அம்சம் : பூமிப்பிராட்டியாரம்சம்
அருளிச் செய்த பிரபந்தங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி
—-
(குருபரம்பரைப்படி…)
ஆஷாடே பூர்வபல்குந்யாம் துலஸீ காநநோத்பவாம்
பாண்ட்யேவிச்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயிகாம்
பூமிப்பிராட்டியார் ஸ்ரீவில்லிபுத்தூரிலே விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் வைத்து வளர்த்து வருகின்ற நந்தவனத்திலுள்ள திருத்துழாயின் இடமாக கலியுகம் 98-வதான நள வருஷம் ஆடி மாசம் சுக்லபக்ஷம் சதுர்தசி செவ்வாய்க்கிழமை பூர நட்சத்திரத்தில் அயோநிஜையாய் ஆவிர்பவித்தார்.
அரங்கருக்கு துழாய்மாலையும் மலர்மாலையும் குடிக்கொடுத்தும், பாமாலை கைங்கர்யம் செய்தும் உகந்தாள்.
இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருப்பாவை (30) நாச்சியார் திருமொழி (143) ஆக 173 பாசுரங்கள்.
மங்களாசாஸனம் செய்தருளியவை 10 திவ்யதேசங்கள்.{jcomments on}