வேலங்குடியில் ஐந்து கோயில்கள்!

சிவ ஆலயம்

சிவன் கோயில்:

இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் அருள்பாலிக்கிறார் சுயம்புநாதர். இவர் நாகராஜனுடன் காட்சியளிப்பது அபூர்வ தரிசனமாக உள்ளது. எனவே நாகதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது இக்கோயில்.

கௌரி அம்மன்:

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகௌரி அம்மன் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அழகுடையவள். எல்லோரின் கவலைகளையும் நீக்கி சந்தோஷம் அளிப்பவள். இந்த அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட திருமணம் ஆகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

முருகன்:

“வேலங்குடி’ என்ற ஊரின் பெயருக்கு ஏற்றபடி வேல் தாங்கிய முருகன் அருள்புரிகிறார். ஆனால் இங்கேயிருந்த மற்ற விக்ரகங்களை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட்டனர் என்பது துயரமளிக்கும் செய்தி. கல்வெட்டுகள் படிக்க முடியாத அளவுக்கு சிதைந்து காணப்படுகின்றன.

லட்சுமி நாராயணப் பெருமாள்:

சிவன் கோயிலுக்கு அருகேயுள்ள கோயிலில் அருள் புரிகிறார் லட்சுமி நாராயணப் பெருமாள். திருவோண நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக இக்கோயிலைச் சொல்கிறார்கள்.

மகா கும்பாபிஷேகம்:

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீகௌரி அம்மன் சமேத சுயம்புநாதர் திருக்கோயில், ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் மற்றும் கிராம தேவதைகளாக அருள்பாலிக்கும் மகாமாரியம்மன், செல்லி அம்மன், ஐயனார் ஆகிய ஐந்து திருக்கோயில்களின் திருப்பணி வேலைகள் கிராம மக்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திருக்கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 10ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறது. பூர்வாங்க பூஜை மற்றும் ஹோமங்கள் ஜூலை 8ஆம் தேதி ஆரம்பமாகின்றன.

இவ்வாலயங்களில் பூஜைகள், ஆராதனைகள் நடைபெறுவதற்கும், விசேஷ தினங்களைக் கொண்டாடுவதற்கும் பக்தர்கள் உதவலாம். சிதிலமடைந்த ஆலயங்களை சீர் செய்து, பல வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்துவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதைக் கருத்தில் கொண்டு ஆன்மீகச் செல்வர்கள் பெருமளவில் உதவி, இறைவனின் அருள் பெறுங்கள்.

தொடர்புக்கு: 9840053289.

Leave a Reply