எசாலத்தில் கும்பாபிஷேகம்!

சிவ ஆலயம்

கருவறையில் இராமநாத ஈசுவரர் லிங்க வடிவாக அருள்புரிகின்றார். கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வடதிசையில் தெற்குநோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி திரிபுரசுந்தரி என அழைக்கப்படுகின்றாள். தனது நான்கு கரங்களில், மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய- வரத முத்திரை தாங்கியும் அருள்பாலிக்கின்றாள். திருமணத்தடை நீக்கும் அற்புதக் கோயிலாக இத்தலம் விளங்குகிறது.

இக்கோயிலில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது கோயில் வளாகத்தில் பூமிக்கடியிலிருந்து முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகளும், உற்ஸவத் திருமேனிகளும் கிடைத்தன. எசாலம் செப்பேடு, ராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு அளித்த நிலக் கொடையைப் பற்றியும், சோழர் வரலாற்றை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.

இத்திருக்கோயில் பற்றிய கட்டுரை 22.4.2011ஆம் தேதியிட்ட தினமணி வெள்ளிமணி இதழில் வெளிவந்துள்ளது.

இக்கோயிலுக்கு முன்பு 1995ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தற்பொழுது ஊர் மக்கள் அறநிலையத்துறையுடன் இணைந்து இராமநாத ஈசுவரர் கோயிலுக்கும் மற்ற கிராமத்துக் கோயில்களுக்கும் வருகிற 10ஆம் தேதியன்று சிறப்புடன் கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் பெற்ற திரிபுரசுந்தரி சமேத இராமநாத ஈசுவரர் திருக்கோயில் சென்று வழிபடுவோம்! நலமடைவோம்!

மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 989473 9834.

தகவல்:

Leave a Reply