ஸ்ரீ வரகுணமங்கை (நத்தம்)

ஆலய தரிசனம்

தேவா நதிக்கரையில் இருந்த புண்ணியகோசம் என்ற அக்ரஹாரத்தில் வேதவித் என்ற அந்தணன் இருந்தான். அவன், தாய், தந்தை, குரு இவர்கள் மூவரையும் வழிபட்டு பணிவிடைகள் செய்து வந்தான். அதன்பிறகே தினமும் ஆசனமிட்டு பகவானை தியானம் செய்வான். இப்படியே சிறிது காலம் கழிந்தது. ஒருநாள், அவன் பகவானை எண்ணி தவம் செய்ய எண்ணினான். அவ்வாறு நினைத்தவுடன், பகவான் அந்தண ரூபத்தில் வரகுணமங்கை சென்று தவம் செய் என்று கூறினார். உடனே அவனும் தனக்கு வெற்றி அளிக்கும் முகமாக, அங்கு விஜயாசனர் என்ற திருநாமத்துடன் எழுந்தருள வேண்டும் என பிரார்த்தனை செய்தான். அவனது வேண்டுகோளை ஏற்றார் பெருமாள். எனவே இந்தத் தலத்தின் மூலவர் விஜயாசனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு தைலக் காப்பு மட்டும் நடைபெறுகிறது.

இங்கே, யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. மாசி மாத பிரம்மோற்ஸவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது நவகிரகங்களில் சந்திரனுக்குரிய தலம். எனவே, சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்று நலம் பெறலாம். இந்தப் பெருமானை வணங்கினால் எண்ணும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகள் கிட்டும்.

தலத்தின் பெயர் : ஸ்ரீ வரகுணமங்கை ( நத்தம் )

அம்சம் : சந்திரன்

மூலவர் : விஜயாசனர் என்ற பரமபதநாதன்

உற்ஸவர் : எம்இடர்கடிவான்

தாயார் : வரகுணமங்கை , வரகுணவல்லி

இருப்பிடம் : ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ.

நடை திறக்கும் நேரம் காலை 8-12 – மாலை 1-6

அர்ச்சகர் தொ.பே. எண்: கே. ராஜகோபாலன் 9486492279

Leave a Reply