ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !

ஸ்தோத்திரங்கள்

 

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்

0. ஓம்……………………நமஹ –    ஓம் ……………………………… போற்றி!
1. க்ருஷ்ணாய – கருமை நிறம் உள்ளவரே

2. கமலநாதாய – ஸ்ரீலட்சுமி நாதரே

3. வாஸுதேவாய – வஸுதேவ புத்திரரே

4. ஸநாதநாய – பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே

5. வஸுதேவாத்மஜாய – வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே

6. புண்யாய – புண்ணியத்தைச் செய்பவரே

7. லீலாமானுஷ விக்ரஹாய – விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே

8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய – ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே

9. யசோதாவத்ஸலாய – யசோதையிடம் மிக்க (வாத்சல்யம்) அன்பு கொண்டவரே

10. ஹரயே – அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே

11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய – நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே

12. தேவகீநந்தனாய – தேவகியின் புத்திரரே

13. ஸ்ரீஸாய – திருமகள் நாயகரே

14. நந்தகோப ப்ரியாத்மஜாய – நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே

15. யமுனா வேக ஸம்ஹாரிணே – யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே

16. பலபத்ர ப்ரிய அநுஜாய – பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே

17. பூதனாஜீவித ஹராய – கொல்லவந்த கொடிய பூதனையின் உயிரைப்

போக்கியவரே

18. சகடாசுர பஞ்சனாய – சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே

19. நந்த வ்ரஜஜநா நந்திதே – வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப்

படுத்துபவரே

20. சச்சிதானந்த விக்ரஹாய – சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே

21. நவநீத விலிப்தாங்காய – புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட

உடம்பினைக் கொண்டவரே

22. நவநீத நடாய – வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே

23. அநகாய – தோஷம் சிறிதும் இல்லாதவரே

24. நவநீத நவாஹாராய – புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது

செய்பவரே

25. முசுகுந்த ப்ரஸாதகாய – முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே

26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய – பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே

27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே – வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான

உருவம் கொண்டவரே

28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே – சுகாசாரியாரின் அமுத வாக்காகிய

பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே

29. கோவிந்தாய – பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே

30. யோகிநாம்பதயே – யோகிகளுக்கு தலைவரானவரே

31. வத்ஸ வாடசராய – கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே

32. அநந்தாய – எவராலும் அறிய முடியாதவரே

33. தேநுகாசுர மர்த்தனாய – தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே

34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய – திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு

இணையாக்கியவரே

35. யமளார்ஜுன பஞ்சனாய – யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை

முறித்தவரே

36. உத்தாலதால பேத்ரே – உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே

37. தமால ச்யாமளாக்ருதயே – பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம்

உள்ளவரே

38. கோபகோபி ஈஸ்வராய – கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே

39. யோகிநே – தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே

40.  கோடிசூர்ய சமப்ரபாய – கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி

பொருந்தியவரே

41. இளாபதயே – பூதேவியாக இளையின் பதியே

42. பரஸ்மை ஜ்யோதிஷே – பரஞ்சோதி ஸ்வரூபமானவரே

43. யாதவேந்த்ராய – யாதவர்களின் தலைவரே

44. யதூத்வஹாய – யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே

45. வநமாலினே – வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே

46. பீதவாஸஸே – பீதாம்பரதாரியே

47. பாரிஜாத அபஹாரகாய – பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே

48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே – கோவர்த்தன மலையை அநாயாசமாக

எடுத்தவரே

49. கோபாலாய – பசுக்களைக் காப்பவரே

50. ஸர்வபாலகாய – எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே

51.  அஜாய – ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே

52. நிரஞ்ஜனாய – தோஷம் சிறிதும் அற்றவரே

53. காமஜனகாய – மன்மதனுக்கு தந்தையானவரே

54. கஞ்ஜலோசனாய – தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே

55. மதுக்னே – மது என்னும் அசுரனைக் கொன்றவரே

56. மதுரா நாதாய – மதுரையம்பதிக்குத் தலைவரே

57. த்வாரகா நாயகாய – துவாரகாபுரியின் தலைவரானவரே

58. பலிநே – மிகுந்த பலம் பொருந்தியவரே

59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே – பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே

60. துளஸீ தாமபூஷணாய – துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே

61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே – சியமந்தக மணியைக் கொண்டவரே

62. நரநாராயணாத்மகாய – நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே

63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய – திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட

வஸ்திரத்தைத் தரித்தவரே

64. மாயினே – மாயையினை உடையவரே

65. பரமபூருஷாய – புருஷ உத்தமரே

66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய – முஷ்டிகாசுரன், சாணூரன்

இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே

67. ஸம்சார வைரிணே – சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே

68. கம்ஸாரயே – கம்சனுகுப் பகையானவரே

69. முராரயே – முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே

70. நரக அந்தகாய – நரகன் எனும் அசுரனை முடித்தவரே

71. அநாதி ப்ரஹ்மசாரிணே – தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே

72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய – கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின்

துக்கத்தைத் துடைத்தவரே

73. சிசுபால சிரச்சேத்ரே – சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே

74. துர்யோதன குலாந்தகாய – துரியோதனன் குலத்தை அழித்தவரே

75. விதுர அக்ரூர வரதாய – விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி

செய்தவரே

76. விஷ்வரூப ப்ரதர்சகாய – அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக்

காட்சியை அளித்தவரே

77. ஸத்யவாசே – சத்தியமான வாக்கினை உடையவரே

78. ஸத்ய சங்கல்பாய – சொன்ன சொல் தவறாதவரே

79. ஸத்யபாமாரதாய – சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே

80. ஜயிதே – எப்போதும் வெற்றியைக் கொண்டவரே

81. ஸுபத்ரா பூர்வஜாய – சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)

82. ஜிஷ்ணவே – ஜயசீலரே

83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய – பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே

84. ஜகத்குரவே – அகில உலகங்களுக்கும் குருவானவரே

85. ஜகந்நாதாய – அகில உலகங்களுக்கும் தலைவர் ஆனவரே

86. வேணுநாத விசாரதாய – புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே

87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே – விசுஷபாசுரனைக் கொன்றவரே

88. பாணாசுர பலாந்தகாய – பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல்

முடித்தவரே

89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே – தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே

90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய – மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே

91. பார்த்தசாரதயே – அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே

92. அவ்யக்தாய – இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே

93. கீதாம்ருத மஹோததயே – கீதை எனும் அமுதக் கடலானவரே

94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய – காளியன் எனும் பாம்பின்

படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே

95. தாமோதராய – யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில்

கொண்டவரே

96. யஜ்ஞபோக்த்ரே – யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே

97. தாநவேந்த்ர விநாசகாய – அசுரர் தலைவனை நாசம் செய்தவரே

98. நாராயணாய – ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே

99. பரப்ரஹ்மணே – பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே

100. பந்நகாசந வாஹநாய – பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக்

கொண்டவரே

101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய – நீரில் விளையாடிய

கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே

102. புண்யஸ்லோகாய – புண்ணியமே கீர்த்தியாக உடையவரே

103. தீர்த்தபாதாய – பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே

104. வேதவேத்யாய – வேதங்களால் அறியப்படுபவரே

105. தயாநிதயே – தயைக்கு இருப்பிடமானவரே

106. ஸர்வ பூதாத்மகாய – எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே

107. ஸர்வ க்ரஹ ரூபிணே – சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும்

உடையவரே

108. பராத்பராய – உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே

நாநாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

Leave a Reply