” காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம் காமருசீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டானம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கிடமாம்
கோவல் நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வார் நன்கே ”
இதன் பொருள் :
சிவபெருமானுக்குரிய எட்டு வீரட்டான தலங்களான , கண்டியூர் , திருக்கடவூர் , திருவதிகை , வழுவூர் , திருப்பறியலூர் , திருக்கோவலூர் , குறுக்கை , மற்றும் திருவிற்குடி முதலான இத் தலங்களின் பெயர்களைக் கூறி , பெருமானுக்கு அஷ்ட புஷ்பங்களை சாற்றி வழிபட ̷ 0;
நம் வினைகள் ஒழிந்து நன்மைகள் உண்டாகுமென்று திருநாவுக்கரசர் அடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.