ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !

ஸ்தோத்திரங்கள்

02" />

 

 

இந்த நிலையில், அஷ்டோத்திர அர்ச்சனை என்று சங்கல்பம் செய்துகொண்டு, நூற்றியெட்டுக்குப் பதிலாக பதினெட்டு அல்லது இருபத்தியெட்டு திருநாமாக்களால் அர்ச்சனை செய்துவிட்டு, ஏனோதானோவென்று நைவேத்தியமும் செய்துவிட்டு, பிரசாதத் தட்டை கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவதை அன்றாடம் சந்நிதிகளில் காண்கிறோம். நம் இந்து மதத்தில்தான் கேள்விகள் கேட்பது பரம்பரை பிரசித்தமாயிற்றே. சிலர் முனகிக் கொண்டே, பெருமானின் வழிபாட்டில் மன ஈடுபாட்டைக் காட்டாமல், நடைபெறும் தவறுகளிலேயே மனத்தைச் செலுத்தி, ஏனடா கோவிலுக்கு வந்தோம் என்ற மன நிலையில் வெளியேறுகின்றனர். இதுவும் அன்றாடக் காட்சிதான்!


சரி… கோவில் என்று வந்தாயிற்று! வழிபாடு என்பதும் நம் மனத்தைப் பொறுத்தது. இது கீதை நாயகன் சொன்ன விஷயம்தான்! எனவே இறை வழிபாட்டைத் தவிர உள்ள கோயிலின் மற்ற நடவடிக்கைகளில் நம் மனத்தை (கருவறையில் இருக்கும் அந்தப் போது மட்டும்) செலுத்தாமல், இந்த அஷ்டோத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு வரிசையில் செல்லும் போதே அர்ச்சித்துக் கொண்டு செல்லுங்கள். உள்ளே அர்ச்சகர் உங்கள் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ஏற்ப பகவானின் பாதத்தில் துளஸி/ பூக்களை சமர்ப்பிப்பதாக மனத்தில் எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் வழிபாடு பூர்த்தியாகும்.

செம்மொழித் தமிழும் பகவானுக்கு பிரியமான மொழிதான். எனவே சம்ஸ்க்ருத வார்த்தை பழக்கம் இல்லாதவர்கள், தமிழில் அதன் அர்த்தத்தைச் சொல்லி, போற்றி போற்றி என்று முடித்து அர்ச்சிக்கலாம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

– என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஆண்டாளம்மை காட்டிய வழியில் இந்த கிருஷ்ண அஷ்டோத்திரத்தை (நூற்றியெட்டு போற்றி வழிபாட்டை) சொல்லி வழிபடுவோம். பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண அஷ்டோத்திரமே அர்ச்சகர்களால் சொல்லப்படுகிறது.

எனவே, இந்த நாமாக்களை அச்சு எடுத்து (பிரிண்ட் எடுத்து) கையில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். சமஸ்கிருத நாமாக்களை இயன்ற அளவுக்கு பதம் பிரித்து, எளிமையாகச் சொல்ல வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

சம்ஸ்கிருத அர்ச்சனைப் பெயராக இருந்தால், ஓம் என்று முதலிலும் நம: என்று பின்னாலும் சேர்க்கவேண்டும். தமிழில் என்றால், ஓம் என்பது பொது. எனவே ஓம் சொல்லி, போற்றி என்பதை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்….

Leave a Reply