பங்குனி ஹஸ்தம் – திருவரங்கத்து அமுதனார் திருநக்ஷத்திரம்

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
/arangathuamudhanar.jpeg" alt="" class="wp-image-2685"/>

பங்குனி ஹஸ்தம் – திருவரங்கத்தமுனார் திருநக்ஷத்திரம்

அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே!
அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே!!

ஶ்ரீ ராமாநுசரை, அனுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி அருளிய திருவரங்கத்தமுதனார் திருநக்ஷத்திரம்(29/3) – பங்குனி ஹஸ்தம்!

இவர் அருளிய இராமாநுச நூற்றந்தாதி அமுதம் போன்று இருந்ததால், உடையவர் இவரை அமுதனார் என்று போற்றினார்!

பங்குனி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாள் (29/3), அமுதனார் அவதரித்த ஹஸ்த நக்ஷத்திரத்தில் நம்பெருமாள் கண்டருளும் சப்தாவரணம் அமைந்து விசேஷமாகும்!

இதில், நம்பெருமாள் வீதி புறப்பாட்டில் அத்யாபக கோஷ்டியில் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்களை சேவிக்க, தாமும் மற்றும் அடியார்களும் காதுகுளிர கேட்பதற்காக சப்தமில்லாமல் (மேள ஓசையே இதில் இல்லாமல்) எழுந்தருள்வார்!
இந்த காரணத்தினால் இந்த பத்தாம் திருநாள் சப்தாவரணம் எனப்படுகிறது!

நம்பெருமாள் வீதி புறப்பாடு முடித்து, தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார்!

இராமாநுசரும் கைத்தலமாக சந்நிதி முற்றத்தில் எழுந்தருளி, நம்பெருமாளை கண்குளிர சேவிப்பார்! பெருமாள் இராமாநுசருக்கு தாம் உடுத்திக் களைந்த பீதக ஆடை, மாலை, சாத்துப்படி, சடாரி சாதிப்பார்!

பின் இராமாநுசர் பெருமாளுக்கு இளநீர் அமுது செய்து, பெருமாள் போனகம் செய்த ஷேஷத்தை ஸ்வீகரித்து கொள்வார் இராமாநுஜர்!!

Leave a Reply