நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
/panguni-uthiram-nellai.jpeg" alt="" class="wp-image-2655"/>

பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்!

இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது.


முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் தினமும் பால் கொண்டு செல்கிறார் இராமகோனார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் தினசரி தடுக்கி விழுந்து பால் கீழே கொட்டுகிறது. அரண்மனை காவலாளிகள் வந்து பார்க்கிறார்கள் அந்த இடத்தில் ஒரு மேடு போல் மூங்கில் திட்டு உள்ளது அதை கோடாரியால் வெட்டுகிறார்கள். வெட்டினால் அந்த மூங்கில் திட்டில் இருந்து ரத்தம் வழிகிறது. மன்னரும் காவலாளிகளும் அந்த இடத்தில் வந்து ஆச்சரியமாய் பார்க்க சுயம்பு லிங்கமாய் அந்த இடத்தில் தோன்றுகிறார் சுவாமி நெல்லையப்பர்

இன்றைக்கும் சுவாமி நெல்லையப்பர் மூலவரின் வலதுபுறம் உச்சியில் கோடாரியால் வெட்டுப்பட்டு சேதப்பட்டிருக்கும்.

மூங்கில் மரத்தடியின் கீழ் தான் சுவாமி நெல்லையப்பர் கருவறை இன்றைக்கும் உள்ளது

சுவாமி நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயர் உண்டு
வேணுவனம் என்றால் மூங்கில் காடு

சுவாமி நெல்லையப்பர் தானாக தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம்

இந்த வரலாற்றை நினைவுகூறும் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நெல்லையப்பர் சன்னதியின் பின்புறம் உள்ள தலவிருட்சமான மூங்கில் மரத்தடியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது

  • கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply