ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட திருவிழாவின் போது பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கலப் பொருட்கள் இன்று ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ரெங்கநாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும். இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி நட்சத்திரம் ஏப்.,26ல் வருகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த தேரோட்டத்தின் போது ரெங்கநாதர், ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நம்பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூ மாலையை சூடிக் கொண்டார்.

ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில் ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் ஆகியோர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம் அணிந்து எழுந்தருள்கின்றனர்.

அதன்படி ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் நேற்று ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக ஆண்டாளுக்கு கிளி, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், சுதர்சன் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply