திருமலை கோவில் ரங்க நாயக்கர் மண்டபத்தில் சேதமடைந்த தூண்கள் விரைவில் மாற்றம்

செய்திகள்

திருமலை கோவிலின் உள்ளே நுழையும்போது இடதுபுறத்தில் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்த ரங்க நாயக்கர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் 18 தூண்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மண்டபம் வலுவிழக்காமல் இருக்க ஒரு மாதத்திற்குள் அனைத்து தூண்களும் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணியினை கோவில் நிர்வாகத்தின் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் தினந்தோறும் நடக்க உள்ள கட்டண சேவையான வசந்த உற்சவம் சேவை இந்த மண்டபத்திலேயே நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரங்க நாயக்கர் மண்டப தூண்களில் வைணவத்தை பறைசாற்றும் சிற்பங்கள் உள்ளன. அதனால் இதை மாற்றும்போது அதிலுள்ள அனைத்து சிற்பங்களும் புதிய தூண்களிலும், அதனுடைய தொன்மை மாறாமல் அப்படியே வடிவமைக்க மேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply