திருமலையில் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள வழிமுறைகள்

செய்திகள்

இது தவிர இங்கு நடைமுறையில் சில கட்டண சேவைகளும் உள்ளன. இந்த சேவைகளின் மூலமும் பெருமாளை வழிபடலாம்.

கட்டண சேவைகளில் தினச் சேவைகள், வாராந்திர சேவைகள் மற்றும் விசேஷ பூஜைகள் ஆகியன நடைமுறையில் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினச்சேவைகள்: சுப்ரபாத சேவை ரூ.120, கல்யாண உற்சவ சேவை ரூ.1000, வசந்த உற்சவம் ரூ.3 00, ஊஞ்சல் சேவை ரூ.200, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரூ.200, சகஸ்ர தீப அலங்கார சேவை ரூ.200 என நாள்தோறும் நடக்கும் சேவைகளுக்கு கட்டணம் பெறப்படுகிறது.

வாராந்திர பூஜைகள்: புதன்கிழமை நடைபெறும் சகஸ்ர கலஸôபிஷேகம் சேவைக்கு ரூ.850, வியாழக்கிழமை திருபாவாடை சேவைக்கு ரூ. 850, வெள்ளிக்கிழமை நடைபெறும் நிஜபாத தரிசனம் சேவைக்கு ரூ. 200 கட்டணமாக அளித்து கலந்து கொல்ளலாம். அதேபோல திங்கள்கிழமை விசேஷ பூஜை நடைபெறும். இதில் ரூ. 600 கட்டணம் செலுத்தி கலந்துக் கொள்ளலாம். இந்த கட்டண சேவைகளில் கல்யாண உற்சவ சேவைக்கு மட்டும் தம்பதிகள் இருவரை அனுமதிப்பர். மற்ற அனைத்து சேவைகளிலும் தனி நபர்களும் அனுமதிக்கப்படுவர். இந்த சேவா டிக்கெட்டுகள் திருமலையிலுள்ள விஜயா வங்கி மூலம் கை ரேகை பதிவு செய்து, அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர 3 மாதத்திற்கு முன்பாகவே கடிதத்தின் மூலம் கோவில் நிர்வாகச் செயல் அலுவலர் பெயருக்கு கட்டண சேவைக்கான தொகையை வரைவு காசோலையாக அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேலும் திருமலை திருப்பதி தகவல் மையங்களில் செயல்படும் ஈ-தர்சன் மையங்கள் மூலமாகவும், இணைய தளத்தின் மூலமாகவும் முன் கூட்டியே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply