இந் நிலையில், சில காரணங்களை கூறி கோவில் நிர்வாகம் அண்மையில் இந்த வஸ்திர அன்பளிப்புகளை நிறுத்தியது. இதனால், கட்டண சேவைகளில் பங்குபெறும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். வழி வழியாக வரும் பாரம்பரியத்தை திடீரெனநிறுத்தியதால், வேதனையடைந்த பக்தர்கள் அவற்றை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மாநில செயலாளர் நவீன் குமார் ரெட்டி கூறியது:
திருமலை திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டு வந்த வஸ்திர அன்பளிப்பை கோவில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. பல்வேறு காரணங்களால் பக்தர்களுக்கு வஸ்திரங்களை வழங்குவதில் சிரமம் உள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது ஏற்கக்கூடியதாக இல்லை.
பல கோடி ரூபாய் காணிக்கை அளித்து வரும் பக்தர்களுக்கு, இந்த சிறிய காணிக்கையை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளது துர்பாக்கியம். அர்ச்சகர்கள், பக்தர்கள் என யாரையும் கலந்து ஆலோசிக்காமல் கோவில் நிர்வாகம் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து வருகிறது. வஸ்திர அன்பளிப்பை பக்தர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.
இதே கருத்தை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, சேவை மனப்பான்மையோடு வஸ்திர அன்பளிப்பை கோவில் நிர்வாகம் மீண்டும் அமல்படுத்துமா என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.
News: dinamani.com