682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சதுரகிரியில் தரிசனம்; செப்டம்பர் 15 முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக செப்., 15 முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.
இக்கோவிலில் செப்., 15ல் பிரதோஷம், செப்., 17ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது.
இதனை முன்னிட்டு செப்., 15 முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.
கனமழை அலர்ட் எதுவும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மக்காத பொருட்களை வீசிச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Posts by ரவிச்சந்திரன், மதுரை: