தெய்வத் தமிழ் விழா
தமிழ்நாட்டில்பலகிராமங்களில்நெல்அறுவடைஆனபின், மரக்காலால் அளப்பதற்கு முன்னர்,””திருவரங்கம்பெரிய கோயில்”என அழைத்து அளந்த பின்னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்கும் வழக்கம் இருந்துவருகிறது. திருவரங்கம் கோயில் மீது மக்களுக்கு அத்தனைப் பக்தி! ஈடுபாடு!
திசைவிளதிசைவிளக்கு
வைணவ சமயத்திற்கு ஒரு திசை விளக்காய் இத்தலம் விளங்குகிறது. நாதமுனிகள், உய்யக்கொண்டார், ஆளவந்தார், பெரியநம்பிகள், எம்பெருமானார்,கூரத்தாழ்வான்,பட்டர்,நம்பிள்ளை,பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் போன்ற பல வைணவ ஆசாரியர்கள் இங்கே வாழ்ந்து வைணவ சமயத்திற்கும், திருக்கோயிலுக்கும் பெருந்தொண்டு செய்துள்ளனர்.
ரங்கவிமானம்-தங்கவிமானம்
திருவரங்கம் கோயிலில் பள்ளிகொண்டருளும் அரங்கனின் சிறப்பை”” விரிதிரைக் காவிரிவியன் பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்தவண்ணமும்” என்று சிலப்பதிகாரம்எ டுத்துரைக்கின்றது. அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் பிரணவரூபமான ரங்கவிமானத்தை பிரம்மா,சூரியனின் புதல்வன் மனு, இட்சுவாகு, தசரதர், ராமர் ஆகியோர் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
“தங்கவிமானம்’ எனச் சிறப்பாக அழைக்கப்படும் இதில் 23
4 பரிவார தேவதைகள் எழுந்தருளியிருப்பதாக “பாரமேச்சுவரசம்ஹிதை’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்விமானத்தில் பிரதானமாக “பரவாசுதேவர்’ எழுந்தருளியுள்ளார்.
விபீடணனுக்குராமபிரான் இவ்விமானத்தை அளித்ததாகவும், அவன் இலங்கைக்கு இதை எடுத்துச் செல்லும் வழியில் திருவரங்கத்தில் அரங்கன் தங்க விரும்பி, இங்கேயே கோயில்ù காண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. விபீடணன், தனது கைகளில் ரங்க விமானத்தைத் தாங்கியிருப்பது போன்று இக் கோயில் தூண்களில் சிற்பங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச்சிறப்பு
இக்கோயிலில் 600க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்திய மொழிகளில் கல் வெட்டுகள் உள்ளன. சோழ, சேர, பாண்டிய, போசள, விஜயநகர நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு பெருந்தொண்டு செய்துள்ளனர். இங்கு கோயில் கொண்டு அருள் புரியும் பெருமாளை அரங்கத்துப் பெருமானடிகள், அரங்கத்துப்பெருமான், திருவரங்கத்து ஆழ்வான், பெரியபெருமாள் என்றெல்லாம் போற்றி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோயிலுக்கு கோதை ஆண்டாள் நந்தவனம், திருவரங்கத்தாழ்வார் நந்தவனம் போன்ற பல நந்தவனங்கள் மலர்மாலைகளை அளித்தன.
மருத்துவத்திற்குதெய்வமாகவிளங்கும்தன்வந்திரிபெருமாளுக்கு இங்குதனிக் கோயில் உள்ளது. போசள மன்னர்கள் காலத்தில் இங்கு மருத்துவமனை இருந்தது. அது, “கருடவாகன பண்டிதர்’ என்பவரால் சீரமைக்கப்பட்டது என்பதை கல்வெட்டுகளின் வழியே அறியமுடிகிறது.
கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஸ்ரீவைஷ்ணவ வாரியம், ஸ்ரீபண்டாரவாரியம், ஸ்ரீவைஷ்ணவக் கணக்கு போன்ற அமைப்புகள் இருந்தன. கோயிலில் நடைபெற்ற விழாக்கள், அளிக்கப் பெற்ற நகைகள், அளிக்கப்பட்ட தானங்கள், அமுதுகள் போன்ற பல முக்கியமான வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன.
கலைச்சிறப்பு
கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகிய கவின் கலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக ரங்கநாதர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள சேஷராயர்மண்டபமும், ஊஞ்சல்மண்டபமும் சிற்பக் கலைக்குச் சிறந்தஎ டுத்துக்காட்டுகள். “குழலூதும்பிள்ளை’ என்ற வேணுகோபாலசுவாமி சந்நிதி, கல்லிலே காவியம் படைக்கும் அரிய கலைக்கோயில்! பெருமாள் சந்நிதி, ராமாநுஜர் ந்நிதி, தாயார் சந்நிதி ஆகியவற்றில் நாயக்கர் கால அழகிய ஓவியங்கள் உள்ளன.
இக்கோயிலில் பண்டைய நெற்களஞ்சியங்கள் இருக்கின்றன. “ஸ்ரீபண்டாரம்'(கருவூலம்) என அழைக்கப்படும் இங்கு, தான்ய லட்சுமியாக “செங்கமலநாச்சியார்’ கோயில் கொண்டு,வற்றாத செல்வத்தை அளிப்பதைக் காணலாம். பெருமாள் சந்நிதிக்கு முன்னர்,
“பெரியதிருவடி’ எனப்படும் கருடாழ்வார் சந்நிதி உள்ளது. இங்கு கருடாழ்வாரின் தேவியர்களான ருத்ரை, சுகீர்த்தி ஆகியோரின் வடிவங்கள் காணப்படுவது சிறப்பு.
இக்கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை அறிந்துகொள்ளும் வகையில் இங்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் பண்டையபூட்டுகள், செப்பேடுகள், கத்திகள், தந்தசிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வைகுண்டஏகாதசித் திருவிழா
திருவரங்கம் திருக்கோயிலில் தினம் தினம் திருவிழாதான்! எனினும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமொழித் திருநாள் (பகல்பத்து),திருவாய்மொழித் திருநாள் (ராப்பத்து)என அழைக்கப்பட்டு} ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப்பெற்று, தெய்வத்தமிழ் விழாவாக “வைகுண்ட ஏகாதசி’ நடைபெறுகிறது.
தெய்வத்தமிழ்விழா
பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவரும் அரங்கனை போற்றி மகிழ்ந்துள்ளனர்; ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு ஒன்றிய பெருமையுடையவர்கள்.அதிகமான பாசுரங்களைப் பாடி அரங்கனை போற்றி மகிழ்ந்தவர் திருமங்கையாழ்வார்.
“பகல்பத்து’ திருமொழித்திருநாள், இக்கோயிலின் அர்ச்சுன மண்டபத்தில் நடைபெறும். முதல் இருநாட்கள் பெரியாழ்வார் அருளிய திருமொழிப் பாசுரங்களும், 3}ம்நாள் ஆண்டாள் அருளிய திருப்பாவை } நாச்சியார் திருமொழியும்,4}ம்நாள் பெருமாள் திருமொழி }திருச்சந்த விருத்தம் பாசுரங்களும்-5}ம் நாள் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை}திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களும்- திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாசுரங்களும்-6}ம் நாள் கண்ணி நூண் சிறு தாம்பு பாசுரங்களும்-திருமங்கையாழ்வார்அருளிய பெரிய திருமொழிப் பாசுரங்களும்,7}8}9ஆம் நாட்களில் பெரிய திருமொழியும்,10}ம் நாள் பெரிய திருமொழிப் பாசுரங்களும் – திருக் குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் பாசுரங்களும் ஓதப்படும். இவை திருவரங்க உற்சவமூர்த்தியான “நம்பெருமாள்’ முன்பு அரையர்களால் அபி நயத்துடன் பாடப்படும். இதை “அரையர் சேவை’ என்பர்.
10}ம் நாள் அன்று நம் பெருமாள், நாச்சியார் கோலத்தில்(மோகினி அலங்காரம்) உலா வரும் காட்சி அற்புதமானது. மனதை ஈர்க்கும் வண்ணம் அழகிய அலங்காரத்துடன், ஒய்யாரமாக அரங்கன் அருள் வழங்கும் கோலம் தனிச் சிறப்புடையது. திருவாய் மொழித்திருநாள் எனப்படும்” ராப்பத்து’ திருநாளில் முதல்நாளில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, முக்கியத் திருநாளாகும். இவ்வைபவம் அனைத்து வைணவக் கோயில்களிலும் நடைபெற்றாலும், திருவரங்கத்தில்
நடைபெறும் விழா வேதனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. அன்று நம் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்துடன் கிளிமாலை அணிந்து, அதிகாலையில் “பரமபதவாசல்’ எனப்படும் சொர்க்கவாசலைக் கடந்து வந்து, திருமாமணிமண்டபம்அடைந்து, பக்தர்களுக்குகாட்சி தரும் கோலம் அற்புதமானது! இவ் விழாவைத் தொடர்ந்து திருக்கைத் தல சேவை 7}ம் நாளிலும், திருமங்கை மன்னன்வேடு பறி 8}ம்நாளிலும் நடைபெறும். இவையும் முக்கிய வைபவங்கள் ஆகும்.
பத்தாம் நாள் அன்று சிறப்பான நிகழ்ச்சியாக “”நம்மாழ்வார் மோட்சம்” நடைபெறுகிறது.”அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்’ என நம்மாழ்வார் தனது பாசுரத்தில் அரங்கனை போற்றுகின்றார். சடகோபர் என்ற திருநாமம் கொண்ட இவர், நம்பெருமாளால் “நம்மாழ்வார்’ என அன்புடன் அழைக்கப்பட்டவர். இவ்விழாவில் அரங்கன் திருவடிகளில்அமர்ந்து நம்மாழ்வார் மோட்சம் அடைவதைச் சித்தரிக்கும் வைபவம்,
காண்போரை உருகவைக்கும். இவ்வைபவத்தில் தனது மாலை, கஸ்தூரி, திருமண் காப்புகளை ஆழ்வாருக்கு நம்பெருமாள் அளிக்கும் காட்சி அற்புதமானது .தன்னை சரண் அடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பதே இந்த வைபவம் விளக்கும் உண்மை.
தீராத வினையனைத்தும் தீர்க்கும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சென்று வழிபட்டு நலமடைவோம்!