682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா::
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தி வருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இரு வேளைகளிலும் வீதி உலா வருவார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்
கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் , பறவை காவடி, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வைகை ஆறு சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், போன்ற பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி
கடனை செலுத்தினர்.
அதிகாலை 4. மணிக்கு மதுரையில் பல்வேறு பகுதிகளிலிருந்து, பால்க் குடத்துடன், திருப்பரங்
குன்றம் முருகன் கோயில் வரை நடந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், அருள்மிகு சித்திவிநாயகர் கோயில், சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகத்தை செய்யப்பட்டது.
இதையடுத்து, முருகன் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழஙாகப்பட்டது.
இதறாகான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.
வைகாசி விசாக விழா.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை, குப்பு லால் பட்டர் செய்தார்.
கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் |அலங்காநல்லூர் அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலில் கருவறையில் உள்ள முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தெத்தூர் கொழிஞ்சிபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்..