இறைவன் திருவடியை சிக்கென பிடித்துக் கொண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

இறைவன் திருவடியை சிக்கன பிடித்துக் கொண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் – ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு!

இறைவன் திருவடியை சிக்கன பிடித்துக் கொண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று, ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.

மதுரை தியாகராசர் கல்லூரியும், அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக, திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் ராம அவதாரம் என்ற தலைப்பில், கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:

நாம் மனிதரிடம் காட்டுவது அன்பு இறைவனிடத்தில் காட்டுவது பக்தி. ராமாயணமும் மகாபாரதமும் இரண்டையும் உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி அவன் துன்பத்தை எவன் போக்குகிறானோ, அவன் தான் வைஷ்ணவன். நமது மதம் சனாதன தர்மம் யாராலும் அழிக்க முடியாத ஒன்று. எங்கு சுற்றினும் ரங்கனை சேவி என்பார்கள்.

பகவான் திருவடியை சிக்கன பிடித்துக் கொண்டால், நமது துன்பங்கள் யாவும் விலகும். இறைவன் குணவான். சகல குணங்களும் பொருந்தியவர் ஸ்ரீ ராமன் 16 குணங்களை உடையவன். ராமாயணம் கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

உலகத்தில் ராமநாமா சுகம். ராம நாமாவை சொன்னால், கேட்டால் எல்லாம் கிடைக்கும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான். அதனால்தான், உடலை சுத்தத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply