682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில், அக்டோபர் எட்டாம் தேதி ஞாயிற்றுக் கிழமை ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. ராகு, பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னியா ராசிக்கும் இடம் பெயர்கிறார்.
இதை ஒட்டி ,மதுரையில் உள்ள அண்ணாநகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நவகிரக ஹோமங்களும், ராகு கேது பீரிதி கோஹமங்களும், அதைத் தொடர்ந்து நவகிரக ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இதே போல ,மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், காலை 11 மணியளவில் நவகிரக ஹோமம், மற்றும் ராகு, கேது பிரீத்தி ஹோமம் ராகு கேது சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெறுகிறது. இதே போல, மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் மாலை 6 மணி அளவில் ராகு கேது பெயர்ச்சி அபிஷேகம் அர்ச்சனை நடைபெறுகிறது.
மதுரை அருகே உள்ள விசாக நட்சத்திர ஸ்தல் மற்றும் ராகு ஸ்தலமாக கருதப்படும் அருள்மிகு பிரளயநாத சுவாமி ஆலயத்தில், மாலை 4 மணி அளவில், ராகு கேது பெயர்ச்சி முன்னிட்டு, சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
சனீஸ்வர பகவான் ஸ்வாமி ராகு கிரகத்திற்கு, அதிபதி நட்சத்திரம் குரு அதிபதி குரு சனி ராகு ஆகிய ஸ்தலமாக கருதப்படும் இத்திருக்கோவிலில் தொழில் அதிபர் எம்.வி.எம். மணி தலைமையில், பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.
சிறப்பு ஹோமங்களை, வரதராஜப் பண்டிட் தலைமையில் வேதியர் குழு செய்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.