மாட்டுப் பொங்கல் திருவிழா முன்னிட்டு அதிகாலையிலேயே அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஐந்து நாட்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், பௌர்ணமி தினமான திங்கட்கிழமை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.