682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், புரட்டாசி திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இத்திருவிழாவில், பக்தர்கள், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் இறுதி நாளில், பகவதியம்மன், சிவன், முருகன், கருப்பணசாமி என சாமி வேடங்கள் அணிந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, மழை வேண்டியும், தொழில் வளம் செழிக்க வேண்டியும், நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு, முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் ஆற்றில் அனைத்து முளைப்பாரிகளும் கரைக்கப்பட்டன.