காந்தமலை முருகனுக்கு கிருத்திகை சிறப்பு அபிஷேகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> நாமக்கல், காந்தமலை முருகன் ஆலயத்தில், புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, தங்க கவச சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் காட்சி அளித்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சிறிய குன்றின் மேல் உள்ள, அருள்மிகு, காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், முருகப்பெருமான், பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, மூலவர் முருகப்பெருமானுக்கு, பஞ்சாமிர்தம், தேன் , பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி கொண்டு, சிறப்பு அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரமாக, தங்க கவசம் சாற்றப்பட்டு, பல வகை வண்ண வாசனை நறுமலர்களால், அர்ச்சனை செய்யப்பட்டு, கோபுர தீபம் உள்பட, மஹா தீபம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமானை வணங்கிச் சென்றார்கள்.

Leave a Reply