திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

செய்திகள்

 

ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படைவீடாக திகழும் முருகன் கோயிலில் ரூ.25 கோடி ரூபாய் செலவில், 92 கிலோ தங்கத்தைக் கொண்டு தங்க விமானம் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றது. தற்போது, பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். குடமுழுக்கு விழாயொட்டி திருத்தணி நகரமே விழாகோலம் பூண்டுள்ளது.

இதனால் திருத்தணி நகரில் அலங்கார வளைவுகளும், வண்ண மின் விளக்குகளும் பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், கோபூஜை, தனபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முருகனை வழிப்பட்டனர். இந்த சிறப்பு பூஜைகளை சுமார் 100 சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர்.

தங்க விமானத்திற்கு தங்கத்தகடு பதிக்கும் பணி நிறைவுபெற்று அலங்கார மின்விளக்குகளால் தங்க விமானம் ஜொலிக்கிறது. வரும் 7-ம் தேதி காலை, 5 மணிக்கு, நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்று காலை, 9 மணிக்கு மேல் 10.3 0 மணிக்குள்ளாக, தங்க விமானத்திற்கும் மற்ற கோபுர விமானங்களுக்கும் கலச நீர் ஊற்றி மகா குடமுழுக்குவிழா நடைபெறுகிறது.

குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மு. ஈஸ்வரப்பன், கோயில் இணை ஆணையர் மா. கவிதா மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

https://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=371459&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

Leave a Reply