படியலூர் பழனியாண்டவர் ராஜ அலங்காரம்

செய்திகள்
murugan alankaram near karamadai - Dhinasari Tamil
மூலவர் படியனூர் பழநி ஆண்டவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 103 ஆம் ஆண்டு  திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள்  இரவு பால் குடம் எடுத்தல்,  அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடைபெற்றது. தைபூச நாளில் காலை அபிஷேக பூஜை முடிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மூலவர் பழநி ஆண்டவர்.  

இரவு 8.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்பட்டது.வள்ளி தெய்வானை சமதே முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி காட்சியளித்தார்.

இந்த திருத்தேர் பெருவிழாவில் படியனூர், சின்ன படியனூர், வடவள்ளி, சென்னிவீரம்பாளையம், சிக்காரம்பாளையம், கள்ளிபாளையம், கரிச்சிப்பாளையம், சின்னக்காரனூர், கன்னார்பாளையம்,  காளட்டியூர், வெள்ளிக்குப்பம்பாளையம் பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தகவல்:சரண்

Leave a Reply