நெல்லையப்பர் கோயில் சௌந்திர சபையில் நடராஜர் திருநடனம்: திரளான பக்தர்கள் தரிசனம்

செய்திகள்

சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா இம் மாதம் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை நண்பகல் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாள் அகஸ்தியர், தாமிரபரணி, குங்குனிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்தரதேவர், அஸ்தர தேவி ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. மாலை சுவாமி, அம்பாள் சப்பரத்தில் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது . வெள்ளிக்கிழமை நண்பகல் சௌந்திரசபை மண்டபத்தில் நடராஜ பெருமான் திருநடனம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நடராஜ பெருமான், சுவாமி, அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடராஜ பெருமான் சௌந்திரசபை மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு நடராஜ பெருமானுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

அதையடுத்து நடராஜர் திருநடனம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கோயில் வெளி தெப்பத்தில்…

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=364835

Leave a Reply