மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா: மார்ச் 10-ல் கொடியேற்றம்

செய்திகள்

சூரிய பிரபை, சந்திர பிரபை காட்சி: மார்ச் – 11

அதிகார நந்தி எழுந்தருளல்: மார்ச் – 12

வெள்விடைப் பெருவிழா: மார்ச் – 14

பல்லக்கு விழா, ஐந்திருமேனிகள் யானை வாகனத்தில் புறப்பாடு: மார்ச் – 15

தேரோட்டம் : மார்ச் – 16 காலை 6 – 7 மணிக்குள்

திருஞானசம்பந்தர் எழுந்தருளி பூம்பாவைக்கு அருளுதல்: மார்ச் -17

ஸ்ரீகபாலீசுவரர் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் திருக்காட்சி அளித்து, மாட வீதிகளில் திருவீதியுலா: மார்ச் – 17 பிற்பகல் 3 மணி

இறைவன் இரவலர் கோல விழா :  மார்ச் – 18

திருக்கல்யாண விழா:  மார்ச் – 19 இரவு 8 – 9 மணிக்குள்

விழாவையொட்டி கோவில் முன்பும், பிராகாரம் முழுவதும் மின் விளக்குகள் அலங்காரத்துடன், பந்தல் அமைக்கப்படும். திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நிறுவப்படும். சிறப்பு பஸ் வசதி, மேம்பால ரயில் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா நாள்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட உள்ளது. 4 மாட வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்களும், தானியங்கி ரகசிய கேமராக்களும் அமைக்கப்படும். குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்படும். கோவில் குளத்தில் விசைப் படகில் தீயணைப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மீட்புப் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்படும்.

10 முதல் 19-ம் தேதி வரை பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும், இலவச பொங்கல், குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படும்.

திருவிழா நிகழ்ச்சிகள் www.mylaikapaleeswarar.org என்ற இணையதளம் மூலம் நேரலையாக ஒலிபரப்பப்படும்.

 

Leave a Reply