ஆடி வெள்ளி: சோழவந்தானில் பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு!

செய்திகள்
madurai cholavanthan - Dhinasari Tamil

ஆடி மாதம் முதல் வெள்ளி மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி அம்மன் கோவில்களில் நிரம்பி வழிந்த பெண்கள் கூட்டம் கூழ் ஊற்றி வழிபாடு…

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி அம்மன் கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

 ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூல் ஊற்றி வழிபாடு செய்தனர்.

 சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில், முன்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

madurai cholavanthan2 - Dhinasari Tamil

இது குறித்து வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது:

ஆடி மாதம்அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அம்மனின் அருளை பெற நாங்கள் கூழ் ஊற்றி வழிபடுகிறோம். கூழ் ஊற்றுவதால் வெப்பமான பூமி ஆடி மாதத்தில் உருவாகும் காற்றின் மூலம் குளிர்ச்சி அடைந்து விரைவில் மழை பெய்ய ஏதுவான சூழல் உருவாகும். ஆடி 18  காலத்தை ஒட்டி விவசாய பணிகள்  தொடங்க மழை அவசியமாகும். அம்மனுக்கு ஊற்றி வரும் கூழால் படையளின் மூலம் மழை பெய்து விவசாயம் செழிக்க வாய்ப்பு உள்ளது.

 மேலும் ,கிராமங்களை சூழ்ந்துள்ள வெட்கை நோய்கள் பரவா வண்ணம் தடுக்கும் வகையில் இந்தக் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறுகிறது என்று தெரிவித்தார். 

அர்ச்சகர் சண்முகம்  பூஜைகள் செய்தார்  நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல,  பூமேட்டு தெரு  உச்சிமாகாளியம்மன், நாடார் தெரு பத்திரகாளியம்மன் மேலரத வீதி வடக்கத்தி காளியம்மன், சங்கங்கோட்டை மந்தை காளியம்மன், பேட்டை வீரமாகாளியம்மன், சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பெண்கள் கூல் ஊற்றி வழிபாடு செய்தனர்.

தினை மாவு இடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதேபோல, சோழவந்தனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும் பெண்கள் கூல் ஊற்றி வழிபாடும் செய்து வருகின்றனர். 

பல்வேறு கோவில்களில் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

Leave a Reply