பரம சிவபெருமானிடம் கேட்டுப் பெற்ற ஒருவர் வரத்தை வைத்துக்கொண்டு, கர்வம் பிடித்த பஸ்மாஸுரன் உலகத்துக்கு பெரும் நாசம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
அவனை ஒழிக்க, மஹாவிஷ்ணு பெருமான் மோஹினி என்ற ஒரு அப்ஸரஸின் உருவத்தை எடுத்தார். தர்மசாஸ்தா பரமசிவ பெருமானுக்கும் மோஹினி அவதாரத்துக்கும் பிறந்த மகன்தான் சாஸ்தா ஐயப்பன் என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
ஐயப்பன் வஸிக்கும் இடமான சபரிமலை கேரளத்தில் ஒரு யாத்திரைஸ்தலம். ஐயப்பன் பஸ்மாஸுரனை அழித்து உலகத்தைக் காப்பாற்றினார். மஹாஸங்ரமண தினத்தன்று, ஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆதலால் அந்த தினத்தில் ஐயப்பனை தரிசிப்பது மிக்க மங்களகரமானது. லக்ஷக்கணக்கான யாத்ரீகர்கள் இதற்காக சபரிமலைக்குச் செல்கிறார்கள்.
சபரிமலைக்கு செல்ல தீர்மானிக்கும் முன் சொந்த விஷயத்தில் சில நிபந்தனைகளை அனுசரிப்பது யாத்திரீகர்களால் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து யாத்ரையில் செல்பவனுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
இந்தியாவில் நிறைய இடங்களில் ஐயப்பன் கோவில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அவைகளில் பல கோவில்களில் ஐயப்பன் திருவிழாக்கள் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. இந்த உத்ஸவங்கள் பகவத் பக்தியையும் தெய்வ நம்பிக்கையையும் பரப்ப நிச்சயம் அவசியமானவை. ஸ்ரீ ஐயப்பனைத் துதித்து எல்லோரும் நன்மைகள் பெறுவார்களாக.