கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

காலை 6.30 மணிக்கு மேல் கொடியேற்றப் பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி பூச்சப்பரத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், உழவாரப் பணிக்குழுத் தலைவர் முத்துசாமி, நடராஜன், செல்வராஜ், பெüர்ணமி கிரிவலக் குழுத் தலைவர் முருகன் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா 10-ம் திருநாளான வியாழக்கிழமை நடைபெறும். இதை முன்னிட்டு, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

Leave a Reply