விழாவின் தொடக்கமாக புதன்கிழமை காலை 6 மணி முதல் 7.3 0 மணிக்குள் திருவல்லா தந்திரி நீலகண்டன் தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இறவு 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9.30 மணிக்கு புஷ்பகவிமானத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலை 7 மணிக்கும், இரவு 9 மணிக்கும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலையில் சிறப்பு அபிஷேகம், இரவில் சமய சொற்பொழிவு மற்றும் இன்னிசை கச்சேரிகளும் நடைபெறும்.÷இம்மாதம் 16-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக சாலமன் பாப்பையா தலைமையில் சொல்லரங்கம் நடக்கிறது. 18-ம் தேதி 7-ம் திருவிழாவில் பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஷ்ரி மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.÷விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இம்மாதம் 20-ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் சுரேஷ்ராஜன், ஹெலன்டேவிட்சன் எம்.பி. ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, காவல்துறை கண்காணிப்பாளர் பவானீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இரவு 10 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசையுடன் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 10-ம் நாளில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணிக்கு சிறப்பு வழிபாடும், மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளலும், 6.30 மணிக்கு இன்னிசையும், இரவு 9 மணிக்கு 10 சிறப்பு தவில்களுடன் நாதஸ்வர இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு மேளதாளத்துடன் சுவாமி, ஆராட்டுத்துறையில் இருந்து கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.