குரு பக்தி தரும் பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

எவ்வாறு தெய்வத்தினிடத்தில் பக்தி வைத்திருக்கிறானோ அதே போல் குருவினிடத்தில் பக்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பக்தி வைத்திருப்பவனுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கேட்டால் அவனுடைய ஜிக்ஞாஸை (அதாவது ஞானத்தைப் பெற வேண்டும்) என்ற விருப்பம் பூர்த்தியாகி விடும். குரு சீடனுக்குக் கற்றுக் கொடுப்பார்.

சீடனுடைய பக்தி விசேஷமாக இருந்தால் குருவிற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு அவகாசம் இல்லையென்றாலும் அவர் ஆசிர்வாதம் செய்தவுடனேயே தத்துவத்தின் பொருள் சீடனுக்குத் தெரிந்துவிடும்.

குருபக்தியினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நாம் சாதரணமான லெளகிக விஷயத்திலேயே பார்க்கும் போது அத்யாத்ம விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.

இத்தகைய குருபக்தியைக் கொண்டிருப்பவர்களை நம்மால் அவ்வளவு சுலபமாகப் பார்க்க முடியாது. தேடிப்பார்த்தால் ஒருவரோ, இருவரோ கிடைப்பார்கள்.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply