ஸ்வாமி நாராயண தீர்த்தர் ஆராதனை விழா மார்ச் 10-ல் தொடக்கம்

செய்திகள்

திருப்பூந்துருத்தியில் நாராயண தீர்த்தர் மடாலயத்தில் அண்மையில் நடைபெற்ற விழாக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பி. உஜ்வல்தீப் காடேராவ் தலைமை வகித்தார். வி. விஸ்வஜித் காடேராவ் முன்னிலை வகித்தார்.

ஆராதனை விழாவிற்கு குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகளார், மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ஆகியோரை அழைப்பது என்றும், நிகழாண்டில் திருக்கோயில் குடமுழுக்கு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆராதனை விழாவில் பங்கேற்க விரும்பும் இளம் கலைஞர்கள் செயலர், 10-2, 2-வது பிரதான சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை-28 என்ற முகவரிக்கு ஜனவரி 20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூட்டத்தில், பொருளாளர் பி. அனந்தராமன் வரவு,செலவு அறிக்கை அளித்தார். செயலர் டி.வி. வெங்கடேசன் நன்றி கூறினார்.

Leave a Reply