நவராத்திரி தத்துவம் – சக்தியின் மகிமை -​ நவகாளி அருள்

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் நவராத்திரியின்போது படிகள் கட்டி,​​ அதில் பொம்மைகள் வைத்து அலங்கரிக்கும் வழக்கம் ஏற்பட்டது.​ ஆரம்பத்தில் ஐந்தாக இருந்த படிகள்,​​ காலப்போக்கில் ஏழு,​​ ஒன்பது என்று ‘ஒற்றைப் படை’ எண்ணிக்கையில் வளர்ந்தன.​ ஆனால் கலசத்தில்,​​ மாவிலைக் கொத்தொடு,​​ மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து,​​ அதில் தேவியை வழிபடும் வழக்கமே ஆதியில் இருந்தது;​ படிகள் கட்டும் பழக்கம்,​​ பின்னாளில் உருவானது என்றும் சில பெரியோர்கள் கருதுகின்றனர்.
அம்பத்தூர் ‘பீட நிர்மயா’ என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.​ சென்னை,​​ அம்பத்தூரில் உள்ள வைஷ்ணவி ஆலயமும் இந்தப் பீடங்களில் ஒன்று.​ மற்றைய பீடங்கள் பெரும் தலங்களாக விளங்கும் காஞ்சி,​​ மதுரை,​​ திருவாரூர்,​​ காஷ்மீரம்,​​ நேபாளம்,​​ துவாரகை,​​ கோலாப்பூர்,​​ சிருங்ககிரி,​​ உஜ்ஜயினி,​​ கொல்கட்டா போன்றவையாக இருக்கின்றன.​ இன்றைய அம்பத்தூர்,​​ 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கியதால்,​​ ‘ஐம்பத்தோரூர்’ என்றழைக்கப்பட்டதாகவும்,​​ காலப் போக்கில் இப்பெயர் மருவி,​​ அம்பத்தூராக மாறியிருக்கலாமென்றும் சான்றோர்கள் கருதுகின்றனர்.​ ​(ஆதாரம்:​ திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட,​​ ‘மங்கலம் அருளும் மகா காளி’ என்னும் பெருந்திரட்டு நூல்).
கல்பதரு! ‘காளி கல்ப தரு’ என்னும் வடமொழி நூலில்,​​ அம்பிகையின் முக்கிய பக்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.​ அனுமன்,​​ விநாயகர்,​​ இந்திரன்,​​ பரசுராமர்,​​ கங்கையன்னை,​​ திருமகள்,​​ சூரிய பகவான்,​​ சந்திரன்,​​ சுக்கிரன்,​​ ராவணன்,​​ குபேரன்,​​ வாயு,​​ பூமாதேவி,​​ ராமபிரான்,​​ பரதன்,​​ பிரகலாதன்,​​ சுகதேவன் ஆகியோரை அன்னையின் திருவருள் பெற்றவர்களாக,​​ ‘காளி கல்ப தரு’ அடையாளம் காட்டுகின்றது.​ ​​ ​ ​ ​ ‘கல்ப தரு’ என்பதற்கு ‘கற்பக மரம்’ என்று பொருள்.​ கேட்டதையெல்லாம் தரும் ஆற்றலுடையது இந்த மரம்.​ ஆனால் கேட்பவர்களின் தகுதியறிந்து தக்கனவற்றைத் தருவது தேவியின் வரம்.​ ​ ​
தீமைகளின் எதிரி ராவணன்,​​ மாபெரும் சிவ பக்தன் என்பதை உலகே அறியும்.​ அதே அசுரன்,​​ தேவி உபாசகனாகவும் இருந்துள்ளான்.​ இலங்கையில் இருந்த அம்பிகையின் ஆலயத்துக்குச் சென்று அன்றாடம் வழிபாடு செய்வானாம் இந்த அசுர வேந்தன்.​ அன்னையும் பக்திக்கு வசமாகி அளவற்ற செல்வமும்,​​ வலிமையும் ராவணனிடம் தங்கியிருக்க அருள் புரிந்தாள்.​ ஆனால் சீதா பிராட்டியை ராவணன் கடத்திக் கொண்டு வந்ததுமே,​​ சாந்த வடிவினளாய் இருந்த சக்தி,​​ உக்கிர வடிவம் கொண்டாள்.​ வானரப் படையுடன் ராம பிரான் இலங்கையுள் நுழைந்ததுமே அவருக்குப் பக்க பலமாக நின்றாள்.​ விஷ்ணு-​ சக்தி கூட்டணி பலத்தால்,​​ எவராலும் வெல்ல முடியாத ராவணன் மாண்டு போனான்.​ ​ ​ ​ ‘பக்தனாக இருந்தாலும்,​​ மாற்றான் மனைவியைக் கவர்வது போன்ற மகாபாதகங்களைச் செய்பவரைவிட்டு தேவியின் திருவருள் நீங்கிவிடும்’ என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.​ இதே காரணத்தினால்தான் ராவணனுக்கு சிவபெருமான் கொடுத்த வாளும் யுத்த நேரத்தில் பயனில்லாமல் போனது.​ பக்தன் என்ற கர்வத்தினால் பாவம் செய்வோர்க்கு,​​ ராவணனின் முடிவே ஒரு சிறந்த பாடமாகும்!​​
சப்த கன்னியர் ‘வாராஹி’ போன்ற சப்த ​(ஏழு)​ மாதர்களின் திருவுருவச் சிலைகளை பல்வேறு ஆலயங்களில் தரிசிக்கலாம்.​ அபூர்வமாக சில கோயில்களில் ‘சப்த கன்னியர்’ வடிவங்கள் இடம் பெற்றிருக்கும்.​ இந்த ஏழு தேவியரும்,​​ சப்த மாதர்களின்றும் வேறானவர்கள்.​ சப்த கன்னியரின் திருநாமங்கள் தேவ கன்னி,​​ பத்ம கன்னி,​​ சிந்து கன்னி,​​ அகஜா கன்னி,​​ வன கன்னி,​​ சுமதி கன்னி,​​ பட்டாரகீது கன்னி என்பனவாம்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘காளி’ என்றவுடன் எல்லோர் நினைவிலும் எழுபவர்,​​ வங்காளத்தில் அவதரித்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆவார்.​ சிவபெருமான்,​​ கிருஷ்ண பரமாத்மா,​​ ராதை,​​ ராமபிரான்,​​ சீதை,​​ உள்ளிட்ட அனைத்துத் தேவ தேவியரின் வடிவங்களையும் பரமஹம்ஸர் தரிசித்திருக்கிறார்.​ ஆனால் முதலில் இவர் கண்டது,​​ காளியன்னையின் தெய்வீகக் காட்சியைத்தான்.​ இவரது முக்கிய சீடரான நரேந்திரன் ​(சுவாமி விவேகானந்தர்),​​ ஆரம்பத்தில் ‘அருவ’ வழிபாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டினார்.​ ஆனால் குருவருளால்,​​ ‘விக்ரக ஆராதனை’ என்பது உண்மையான வழியே எனவுணர்ந்தார்.​ குருவை போலவே சீடரும் தேவி உள்பட பல தெய்வங்களின் காட்சியைப் பின்னாளில் பெற்றார்.
நவராத்திரி!​ நவகாளி! தென்னாட்டில் துர்க்கை,​​ லட்சுமி,​​ சரசுவதி ஆகிய மூன்று பிரதான தேவியரை நவராத்திரி சந்தர்பத்தில் பூஜிக்கின்றனர்.​ ஆனால் வட நாட்டில் ​(குறிப்பாக வங்காளத்தில்)​ தினத்துக்கு ஒரு தேவியாக ஒன்பது காளிகளை,​​ இதே சமயத்தில் பூஜிக்கின்றனர்.​ ஸித்தி காளி,​​ மகா காளி,​​ மயான காளி,​​ குஹ்ய காளி,​​ தட்சிண காளி,​​ சாமுண்டி காளி,​​ தன காளி,​​ காமகூலா காளி,​​ மகா நீல காளி என்பன இக்காளி அன்னையரின் திருநாமங்களாகும்.
கவிதை தெய்வம் ‘உவமைக்கு காளிதாஸன்’ என்று பண்டிதர்கள் போற்றுவார்கள்.​ அறிவிலியாய் இருந்த இவர்,​​ காளியின் அருளால்,​​ இன்றளவும் ‘மஹா கவி’ என்னும் பெரும் புகழோடு விளங்கும் புலமையைப் பெற்றுள்ளார்.​ தென்னகத்து மகா கவியான பாரதியாரும் பராசக்தியை வழிபடும்​ பேறு பெற்​ற​வர்.​ கவி காளமேகமும் ஆனைக்கா அம்பிகையின் அருளால் ‘பாடும் வரம்’ பெற்ற பாவலருள் ஒருவர்.​ அன்னையின் அருள்,​​ ஊமைகளையும் கவிஞர்களாக்கும் என்பதனால்,​​ ‘மூகாம்பிகை’ என்ற பெயரும் பராசக்திக்கு உண்டு.
-​ ​ ஆனந்த பைரவி
மேலும் தகவல் :: 8;SectionName=Vellimani&artid=315359&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF!%E2%80%8B%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF!">www.dinamani.com