அருமை தேவனே!, மகவு பெறுதற்கு வீடு விடுதல், மகவு பெறுதற்கு வேண்டியவற்றை உதவுதல், காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள் அருந்திடும் அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல், சொலற்கரிய சத்திரம் கட்டல், (துறவிகள் இருக்கும்) மடம் அமைத்தல், பசுக்களின் தினவு நீக்கும் கல்நடுதல், பெண்களுக்கு இன்பம் அளித்தல், அம்பட்டனுக்கு உதவுதல், வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், நீர் வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் கொடுத்தல், பசுக்களுக்குத் தீனி, (ஆதரவு அற்ற) பிணத்தை அடக்கம் செய்தல், குளம் வெட்டுதல், இறக்கும் உயிரைக் காத்தல், தின்பண்டம் அளித்தல், வெற்றிலைபாக்குக் கொடுத்தல், சுண்ணாம்பு உதவுதல், சிறையில் அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், பிறர் துயரைப் போக்குதல், சோலை வைத்தல் பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், இரப்போர்க்கு ஈதல், அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு அளித்தல், திருக்கோயில் கட்டுதல், மருந்து கொடுத்தல், பாடம் படிப்போர்க்கு உணவு அளித்தல், (ஆகிய) முப்பத்திரண்டு அறங்களும், முற்காலத்தில் உமையம்மையார் காஞ்சியிற் செய்தவை ஆகும்.