682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுந்தோறும் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதேபோல, இந்த ஆண்டும் கந்த சஷ்டித் திருவிழா – விழாவை முன்னிட்டு இன்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இந்தநிலையில் மாலை 4 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் முருகபெருமான் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். பின்னர் 5.30 மணிக்கு ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.
அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோஹரா, கந்தனுக்கு அரோஹரா கோஷத்துடன் முருகப் பெருமானை தரிசித்தனர்.
நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.