சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் உலக நன்மைக்காக மகா யாகம் நடந்த போது

சோழவந்தான்: சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் வருடாபிஷேகம்,உலக நன்மைக்காக மகாயாகம் நடந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரம் ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாக்கள் இங்கு நடைபெறும்.

இக்கோவிலில் 2014ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேகம் நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு கடந்த வியாழக்கிழமை கோவிலைச்சேர்ந்தவர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.

நேற்று காலை பிரசாந்த்சர்மா தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள்,திருப்பணி கமிட்டி மற்றும் கோவில் ஆலோசகர்,கருப்பட்டி அல்லூர் சமயத்தார், மாங்குளம் வகையறா உட்பட கோவிலைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் மகா யாகம் நடந்தது.

மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் 21 புனித குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.துரோபதி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், திருமஞ்சனம் உட்பட 21 அபிஷேகம் நடைபெற்றது, இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்து.அலங்காரம் நடைபெற்றது.

ஆயிரத்தெட்டு அர்ச்சனை,சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவிலில் திருவிழா நடந்ததாகவும் இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவர்லால், குப்புசாமி, திருப்பணிக்கமிட்டி மற்றும் கோவில் ஆலோசகர் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன், ஆதி. பெருமாள், சமைத்தார்கள் கோவிந்தராஜ, முன்னாள் தலைமையாசிரியர் கோவிந்தராஜ், கோபி,மாங்குளம் வகையறா மாணிக்கம், துரைப்பாண்டி, தபசுகுமாரன் உட்பட கோவிலைச் சேர்ந்vதவர்கள் திரளாக கலந்து கொண்டனர்

  • செய்தி : ரவிசந்திரன் மதுரை

Leave a Reply